கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக, சந்திர ஜயதிலக நியமனம்

🕔 March 7, 2018

– எப். முபாரக் –

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக சந்திர ஜயதிலக இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்திர ஜெயதிலக்க, அம்பாறை மேல் நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் நீதவானாக கடமையாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களின் நியமனங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்துச்செய்த ஆளுநர் போகொல்லாகம, புதிய நியமனங்களை வழங்கியுள்ளார்.

இதற்கிணங்க, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பீ.டப்ளியு.டி.சி. ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments