காங்கேயனோடை வீடுகளுக்கு முன்னால், வெடிகுண்டுகள் மீட்பு: பெயர் எழுதப்பட்ட பதாகையும் கண்டெடுப்பு

🕔 March 7, 2018

காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளின் முன்பாக இன்று புதன்கிழமை காலை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளுக்கு முன்பாக, இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர்கள், காலை எழும்பி வெளியில் வந்து பார்த்த போது, வீட்டுக்கு முன்பாக குண்டுகள் இருப்பதைக் கண்டுள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த குண்டுகள் காணப்பட்ட வீடுகளுக்கு முன்னால், ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸ்ரீ லங்கா’ என எழுதப்பட்ட பதாகை தொங்கவிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள், தோற்றத்தின் அடிப்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments