களத்தில் ஹக்கீம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்

🕔 March 5, 2018
திகன பிரதேசத்தில் கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடரும் தாக்குதல்களினால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, ராணுவத்தினர் களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை நேரில் சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஸ்லிம்கள் எவ்வித அசம்பாவிதங்களிலும் ஈடுபடாமல் அமைதி காக்குமாறும் வேண்டிக்கொண்டார்.

பொலிஸ் நிலையத்துக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்குள்ள உயரதிகாரிகளுடன் பேசி – முஸ்லிம் பிரதேசங்களில் இரவுநேர தாக்குதல் நடைபெறாதவாறு, சந்திகளில் பொலிஸாரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

(மு.காங்கிரசின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்