அம்பாறை சம்பவத்தின் சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்கு, நான் முயற்றிப்பதாக கூறுவது முட்டாள்தனமாகும்

🕔 March 2, 2018

ம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தான் காப்பாற்ற முயற்சி செய்வதாக, சிலர் கூறுவது முட்டாள்தனமானது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைவர்களை நான் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சிறு மோதல் சம்பவம் மத ஸ்தானம் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு சென்றுள்ளது. இது மேலும் பரவாமல் நாம் தடுக்க வேண்டும். அதனை விட்டு விட்டு, எரியும் நெருப்பில் என்னை ஊற்ற முயற்சிக்க கூடாது.

அம்பாறையில் சமாதானம் மலரவே நாம் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளோம். அதை விடுத்து எவரையும் காப்பாற்றும் நோக்கில் அல்ல. இந்த சம்பவத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் பொறுப்பிலுள்ள எவரும் தொடர்புபடவும் இல்லை, எவரையும் காப்பற்ற வேண்டிய எந்த ஒரு தேவையும் எமக்கு இல்லை.

குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்ற போது, சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குள் பொலிஸார் இருந்தனர். அதேபோல தாக்கபட்ட பள்ளிவாசலுக்கு மிக அண்மையில் பொலிஸ் நிலையம் உள்ளது. தாக்குதலை தடுத்து நிறுத்துவது பொலிஸாரின் கடமை. அதனை விடுத்து இந்த சம்பவத்தை அரசியலுடனும், கட்சிகளுடனும் முடிச்சு போடுவது முட்டாள்தனமாகும்.

அது தவிர நான் இந்த அரசாங்கத்தின் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை. எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இந்த அரசாங்கத்தில் இல்லை. அவ்வாறிிருக்க, நாம் எவ்வாறு சட்டம் ஒழுங்கு விடயத்தில் மூக்கை நுழைக்க முடியும்.

கடந்த காலங்களைப் போல இந்த விடயத்தையும் மஹிந்த ராஜபக்ஷவின் மேல் போட்டு, அரசியல் லாபம் தேடும் முயற்சியாகவே நாம் இதனை பார்க்க வேண்டியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் அனைத்து இன மக்களும் மிகவும் நல்லுறவுடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்பாகும்” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்