அம்பாறை வன்செயலுடன் தொடர்புபட்ட 05 சந்தேக நபர்கள் கைது

🕔 February 28, 2018

– மப்றூக், றிசாத் ஏ. காதர் –

ம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாதத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 05 பேரை, அம்பாறை பொலிஸார்  இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

பௌத்த பிக்கு ஒருவருடன் அம்பாறை பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலம் வழங்கச் சென்றிருந்த இவர்களை, பொலிஸார் கைது செய்துள்ளதாக அறிய முடிகிறது.

அம்பாறை நகரில் நேற்று முன்தினம் இரவு முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டதோடு, அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதேவேளை, முஸ்லிம்கள் சிலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாகனங்கள் சிலவற்றுக்கு தீ வைக்கப்பட்டதோடு, இன்னும் சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுமிருந்தன.

இந்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரிலேயே, மேற்படி ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாளைய தினம் பொது விடுமுறை தினம் என்பதால்,  நாளை மறுதினம் நீதிமன்றில்  இவர்கள் ஆஜர்  செய்யப்படலாம் அல்லது நாளைய தினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

அம்பாறை மாவட்டத்துக்கு இன்றைய தினம் விஜயம் செய்திருந்த அமைச்சர் றிசாட் பதியுத்தீன் – மேற்படி வன்செயல்களுடன் தொடர்புபட்டவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு, பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக வலியுறுத்தியிருந்த நிலையில், இந்தக் கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்து.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்