அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; பிரதமர் ரணில் பங்கேற்கவில்லை

🕔 February 20, 2018

மைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற வேளையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் கலந்து கொள்ளவில்லை என தெரிய வருகிறது.

அதேவேளை, ஐ.தே.கட்சினருக்கும் சுதந்திரக் கட்சியினருக்குமிடையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கடுமையான வாய்த் தர்க்கங்களும், வாக்கு வாதங்களும் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டுமென சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர், அமைச்சரவையில் பகிரங்கமாக கூறியுள்ளனர். இதன் காரணமாகவே, குறித்த வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் நன்மை கருதி தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு, தாம் உடன்படுவதாக, நேற்று  சுதந்திரக் கட்சியினர் நாடாளுமன்றில் தெரிவித்த நிலையிலேயே, அமைச்சரவையில் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்திருத்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்