சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம்

🕔 February 16, 2018

– மப்றூக் –

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர் தங்கள் கட்சிகளின் ஆதரவை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மு.காங்கிரசுக்கு 07 உறுப்பினர்களும், றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரசுக்கு 05 உறுப்பினர்களும் உள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்றில் சுதந்திரமாக இயங்கும் மேலும் 20 உறுப்பினர்களில் சிலரும், சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தித்துக்கு இணங்க, பிரதம மந்திரியை நீக்குவது தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்தாலோசித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுடனும், இன்று காலை ஜனாதிபதி பேசியதாகவும் தெரிய வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்