ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், எங்களுடன் இணைகின்றனர்: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே

🕔 February 15, 2018

 க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமொன்றினை உருவாக்கும் பொருட்டு, ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இணையவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்தார்.

காலியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஒன்றிணைந்த எதிரணியினருக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் கூறுகையில்;

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஒன்றிணைந்த எதிரணியினரும் இணைவதென்பது விசித்திரமான விடயமல்ல. நாங்கள் ஒரே அணியினர்தான். இரண்டரை வருடங்களாக பிரிந்திருக்கின்றோம். எனவே, அடுத்த இரண்டரை வருடங்களுக்கு நாங்கள் எந்தவித சலுகைகளும், ஒப்பந்தங்களுமின்றி இணைவதற்கு ஒப்புக் கொண்டுள்ளோம்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் நாட்டுக்கு நல்லது செய்தால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெறும்.

எதிர்வரும் தேர்தலில் நாங்கள் இரு தரப்பும் பிரிந்து போட்டியிட்டால், நாங்கள் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. அதனால்தான், ஐக்கிய தேசியக் கட்சியை விட்டும் விலகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எங்களுக்குக் கூறினார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்