அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கூட்டாட்சி; அதா, ஹசனலி, பசீர் பேச்சுவார்த்தையில் இணைக்கம்

🕔 February 14, 2018

– முஸ்ஸப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையில், தேசிய காங்கிரசும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளதாக அறிய முடிகிறது.

தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி. ஹசனலி மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர், இது தொடர்பில், சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதன்போது, அட்டாளைச்சேனை பிரதே சபையிலும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மையுள்ள ஏனைய சபைகளிலும் இணைந்து ஆட்சியமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான 18 ஆசனங்களில் 08 ஆசனங்களை யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்ஸிம் காங்கிரசும், 06 ஆசனங்களை தேசிய காங்கிரசும், 03 ஆசனங்களை மயில் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் கைப்பற்றியுள்ளன.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சி, அச் சபையில் ஓர் ஆசனத்தினை பெற்றுள்ளது.

இந்த நிலையிலேயே, முஸ்லிம் காங்கிரசை தவிர்த்து ஆட்சியமைப்பதற்கு, மேற்படி கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மையுள்ள ஏனைய சபைகளிலும் இவ்வாறான நிலைதான் காணப்படுகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்