தேர்தல் முடிவு குறித்து ரஊப் ஹக்கீம் பொய்யான தகவல்; எழுகிறது விமர்சனம்

🕔 February 13, 2018

– அஹமட் –

டைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவு தொடர்பில், மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு உள்ளுராட்சி சபையிலும் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ள நிலையில்; ‘அம்பாறை மாவட்டத்தில் அதிக சபைகளைக் கைப்பற்றியுள்ளோம்’ என, தனது பேஸ்புக் பக்கத்தில் ரஊப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இது முற்றிலும் பொய்யான தகவலாகும்.

உள்ளுராட்சி சபையொன்றில் 50 வீதத்துக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றும் கட்சி அல்லது குழு ஒன்றுக்கே, அச்சபையில் ஆட்சியமைக்க முடியும். அவ்வாறில்லையெனில் அங்கு கூட்டாட்சி அமைப்பதுதான் சாத்தியமாகும்.

ஆனால், அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு சபையிலும், 50 வீதத்துக்கும் அதிகமான ஆசனங்களை மு.கா. கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை மாநகரச சபையின் 41 ஆசனங்களில் வெறும் 12 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்ட மு.காங்கிரஸ், சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு விடுத்த வேண்டுகோளையும், சாய்ந்தமருது சுயேட்சைக்குழு நிராகரித்திருந்தது.

இந்த நிலையில், தற்போதுவரை அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு சபையினையும் மு.கா. கைப்பற்றவில்லை. ஆயினும், பல சபைகளை தாம் கைப்பற்றியதாக ஹக்கீம் தெரிவித்துள்ளமையானது, பொய்யான தகவலாகும்.

இந்த தகவலை விமர்சித்து, ரஊப் ஹக்கீமுடைய பேஸ்புக் பக்கத்திலும், பலர் எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்