சாய்ந்தமருதைக் கைப்பற்றியது தோடம்பழம்; 06 வட்டாரங்களிலும் மு.காங்கிரஸ் மண் கவ்வியது

🕔 February 10, 2018

– முன்ஸிப் அஹமட் –

ல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு, அங்குள்ள 06 வட்டாரங்களையும் கைப்பற்றியுள்ளது.

அந்த வகையில் 18ஆம் வட்டாரத்தில் தோடம்பழ சின்ன சுயேட்சைக்குழு 1678 வாக்குகளையும், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் 656 வாக்குகளையும் பெற்றுள்ளது.

இதன்படி 19ஆம் வட்டார வாக்குகள்; சுயேட்சை – 1900, யானைச் சின்னம் – 400, 20ஆம் வட்டாரம்; சுயேட்சை – 2108, யானைச் சின்னம் 292, 21ஆம் வட்டாரம்; சுயேட்சை – 2728, யானைச் சின்னம் – 358, 22ஆம் வட்டாரம்; சுயேட்சை – 2336, யானைச் சின்னம் – 351, 23ஆம் வட்டாரம்; சுயேட்சை -2398, யானைச் சின்னம் – 221 வாக்குகளாகும்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் வழிநடத்தலுக்கிணங்க, தோடம்பழச் சின்னத்தைக் கொண்ட சுயேட்சைக் குழு களமிறக்கப்பட்டிருந்தது.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்கும் வரை, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை எனும் முடிவுக்கிணங்க, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் வழிநடத்தலில் சுயேட்சைக்குழு களமிறக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தினை மதித்து, ஏனைய அரசியல் கட்சிகள் சாய்ந்தமருதில் தமது வேட்பாளர்களை களமிறக்கவில்லை. இருந்த போதும்,  யானைச் சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை சாய்ந்தமருதில் போட்டியிட வைத்திருந்தது.

இந்த பின்னணியிலேயே, சாய்ந்தமருதின் 06 வட்டாரங்களையும் தோடம்பழச் சின்னத்தைக் கொண்ட சுயேட்சை அணி கைப்பற்றியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்