வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்கு, சிறுவனைப் பயன்படுத்தியமை தொடர்பில் சர்ச்சை

🕔 February 9, 2018

சிறுவனொருவன் வாக்குப் பெட்டிகளைச் சுமந்து செல்லும் காட்சியொன்று புகைப்படமாக வெளியானதை அடுத்து, அது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பொலநறுவை மாவட்டத்திலுள்ள புளத்சிங்கள தேசிய கல்விக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்திலிருந்து, மற்றொரு வாக்களிப்பு நிலையத்துக்கு, வாக்குப் பெட்டிகளை அனுப்புவதற்காக, குறித்த பெட்டியை அந்தச் சிறுவன் சுமந்து சென்றிருந்தான்.

இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலநறுவை மாவட்டத்திலுள்ள 295 வாக்களிப்பு நிலையங்களிலும் 3500 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே, வாக்குப் பெட்டியைச் சுமப்பதற்காக மேற்படி சிறுவன் பயன்படுத்தப்பட்டுள்ளான்.

இது குறித்து பொலநறுவை அரசாங்க அதிபரிடம் கேட்டபோது; தனது பரபரப்பான பணிகளுக்கிடையில், தான் இந்தத் தகவல் குறித்து அறியவில்லை எனக் கூறினார்.

ஆயினும், சிறுவர்களை இவ்வாறு பணிக்கமர்த்துவது, சட்ட விரோதமான செயற்பாடாகும் என்று, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்