பொலிஸாரின் கோமாளித்தனம்: உரம் தயாரித்த விவசாயி, கசிப்பு உற்பத்தி செய்ததாக கைது

🕔 February 8, 2018

திரவத் தன்மையுடைய சேதனப் பசளை தயாரித்த விவசாயி ஒருவரை, சட்ட விரோத கசிப்புக் காய்ச்சியதாகக் கூறி, பொலிஸார் கைது செய்து செய்த சம்பவமொன்று, கினிகத்தேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து, ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ‘கினிகத்தேன பொலிஸாரின் கோமாளித்தனம்’ எனும் தலைப்பில் குறித்த செய்திக்கு, அந்த ஊடகம் தலைப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த ஜி.டி. தயாசிறி அம்பகமுவ எனும் 60 வயதுடைய விவசாயியாவார்.

இந்த கைது தொடர்பில் மேற்படி ஆங்கில ஊடகம் கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த கைதினை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இரண்டு பரல்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைந்த, மூலோபாய தொழில் முகாமைத்துவ நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, மேற்படி திரவ சேதனப் பசளையினை, குறித்த விவசாயி தயாரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் அசேதன விவசாய முறைமையினை பின்பற்றி வந்த மேற்படி விவசாயி, இந்த வருடத்திலிருந்து சேதனை விவசாய முறைமைக்கு மாறியதாகக் கூறப்படுகிறது.

மீனின் பகுதிகள், பழ வகைகள் மற்றும் தாவர வகைகளிலிருந்து திரவ சேதன பசளை தயாரிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட விவசாயியின் வீட்டில்  – திரவ சேதன பசளை தயாரிக்கும் முறை பற்றி, மூலோபாய தொழில் முகாமைத்துவ நிறுவனத்தினர் வழங்கிய கையேடு இருந்துள்ளது.

அதனை கீழே தருகின்றோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்