அடாத்தாக சிலை வைப்பதைத் தடுக்கவே, யானைச் சின்னத்தில் போட்டியிகிறோம்: பொத்துவிலில் மு.கா. தலைவர்

🕔 February 8, 2018

– அஹமட் –

ம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுடைய வாக்குகளின் மூலம், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாகமகே, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இறக்காமம் – மாயக்கல்லி மலையில், புத்தர் சிலையினை அடாத்தாக வைத்துச் சென்றதாக, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் – குற்றம் சாட்டொன்றினை முன்வைத்தார்.

இவ்வாறான சிலை வைப்புகளைத் தடுப்பதற்காகத்தான் பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.

பொத்துவில் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை  நடைபெற்ற, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சின் யானைச் சின்னத்திலேயே,  முஸ்லிம் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

இதேவேளை, பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தலிலும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஆதிகம் நிலைவும் உள்ளுராட்சி சபைகளிலும்,  ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலேயே, இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே, ஹக்கீம் இந்தக் குற்றச்சாட்டினைக் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்