அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி

🕔 February 7, 2018

– அஹமட் –

கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, முல்லேரியா, கற்பிட்டி மற்றும் வெலிமடை ஆகிய உள்ளுராட்சி சபைகளில் ஆகக்குறைந்தது தாங்கள் 10க்கு குறையாத ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

மேற்படி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைளுக்கு பொறுப்பாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பில், நஸார் ஹாஜி செயற்பட்டு வருகின்றார்.

“ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு  தேர்தலொன்றில் – புதிய கட்சியாக வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் முதன் முதலாக களமிறங்கியுள்ளது. ஆனாலும்,  எமது கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசனலி ஆகியோர் 30 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் அனுபவம் பெற்றவர்கள். அவர்களின் வழிநடத்தல்களால், எமது கட்சி ஆற்றலுடன் செயற்பட்டு வருகிறது” என்றும், நஸார் ஹாஜி கூறினார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவடத்திலும் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் நேரடிக் கண்காணிப்பில், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு போட்டியிடுவதாகவும், அதனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது கட்சிக்கு சிறந்ததொரு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து தமது கட்சி – மயில் சின்னத்தில் போட்டியிடுவதால், அந்த மாவட்டத்திலும் தமது கூட்டணி, பல உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்