சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக, நாங்கள் எழுதிக் கொடுத்ததையே ரணில் வாசித்தார்: மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 February 7, 2018

“சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவேன்” என்று, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தாங்கள் எழுதிக் கொடுத்ததையே, அவர் கடந்த பொதுத் தேர்தல் கால பிரசார மேடையில் வாசித்ததாக, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

வாழைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

தாங்கள் எழுதிக் கொடுக்கும் வரை, அந்த விடயம் குறித்து ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிந்திருப்பதில்லை என்றும், மு.காங்கிரஸ் தலைவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தாம் ஆட்சியமைத்தால், சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையினை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்க அப்போது சிங்கள மொழியில் கூறியதை, மு.காங்கிரசின் தற்போதைய செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் மேடையில் மொழி பெயர்த்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

இவ்விடயத்தினையே, ரணில் விக்ரமசிங்க சுயமாகக் கூறவில்லை என்றும், தாங்கள் அவ்வாறு கூறும்படி எழுத்திக் கொடுத்ததையே, ரணில் விக்ரமசிங்க மேடையில் வாசித்தாகவும், மு.கா. தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்