வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு

🕔 January 31, 2018

– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்துள்ளமையானது, அவர் கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல என்றும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, தேசியப்பட்டிலை அவர் லஞ்சமாக வழங்க முன்வந்துள்ளார் எனவும், முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் 2019ஆம் ஆண்டிலோ அல்லது 2020ஆம் ஆண்டிலோ நடக்குமாக இருந்தால், அட்டாளைச்சேனைக்கு இப்போது தேசியப்பட்டிலை ரஊப் ஹக்கீம் வழங்கியிருக்க மாட்டார் என்றும் அன்சில் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஒரு பொதுத் தேர்தலில் வாக்களித்தால் தேசியப்பட்டியல் தருவேன் என்று கூறிய மு.கா. தலைவர், இப்போது நடைபெறவுள்ள தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக தேசியப்பட்டியலை லஞ்சமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார் எனவும் கூறினார். 

எவ்வாறாயினும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக, தேர்தல்களில் வாக்குகளை வழங்குகின்றவர்களாக, மக்களை முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் பயிற்றுவிக்கவில்லை எனவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்