ஆயிரம் ரூபா நாணயத் தாளில், சாய்ந்தமருது பள்ளிவாசல்

🕔 January 31, 2018

– நியாஸ் (சாய்ந்தமருது) –

புதிதாக வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் நாணயத் தாளில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் அடைவதை சிறப்பிக்கும் வகையில், இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

ஏலவே, சமூகப் பாதுகாப்பினை ஏற்படுத்துவதில் சமய நிறுவனங்களின் முக்கியத்துவம் எனும் விடயத்தை உள்ளடக்கி, தரம் 09 மாணவர்களுக்கான குடியியல் கல்வி பாடப்புத்தகத்திலும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் படம் இவ்வருடம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது பிரதேசம் அண்மைக் காலமாக அரசியல் ரீதியாக பாரிய கவன ஈர்ப்பினைப் பெற்று வரும் நிலையில், அந்த ஊரை பெருமைப்படுத்தும் நிகழ்வுகளும்  இவ்வாறு நடந்தேறி வருகின்றமை மகிழக்ச்சிக்குரியதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்