சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா; கிழக்கு மக்களை தூஷித்ததன் விளைவு

🕔 January 24, 2018

 முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன், தனது பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார் என, அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது பேஸ்புக் பதிவொன்றுக்கு கருத்துக்களை  எழுதியிருந்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபரொருவருடன், சபீக் ரஜாப்தீன் எழுத்து மூலம் விவாதித்திருந்ததோடு, கிழக்கு மாகாண மக்களை மிகவும் கீழ்தரமாகவும் திட்டி எழுதியிருந்தார்.

கிழக்கு மாகாணத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள், அரசியல் வால் விடித்துக் கொண்டு தொழில் பிச்சை கேட்டு அலைபவர்கள், அவர்களை நாங்கள் முட்டுக்காலில் வைப்போம் என்றெல்லாம் சபீக் ரஜாப்தீன் எழுதியிருந்தார்.

இதனையடுத்து, இந்த விடயமானது சபீக் ரஜாப்தீனுடன் விவாதித்தோரால் பகிரங்கப்படுத்தப்பட்டமையினை அடுத்து, சபீக் ரஜாப்தீனுக்கு எதிராகவும், அவருக்கு பதவிகளை வழங்கி அழகு பார்க்கும் மு.கா. தலைவருக்கு எதிராகவும் கிழக்கு மக்கள் தமது உணர்வுகளை சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் பதிவிடத் தொடங்கினர்.

இதன் காரணமாக, சபீக் ரஜாப்தீனிடம் மு.கா. தலைவர் விளக்கம் கோரியதாகவும், இந்த நிலையிலேயே நீர் வழங்கல் அதிகாரசபையிலும், கட்சியிலும் வகித்த பதவிகளை சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா செய்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

தொடர்பான செய்தி: கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு

சபீக் ரஜாப்தீனுக்கு எதிராக புதிது வெளிட்ட வீயோடி பதிவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்