தேர்தல் குற்றங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது; 18 பேர் வேட்பாளர்கள்: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

🕔 January 14, 2018

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இவர்களில் 18 பேர், எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாவர்.

கடந்த 09ஆம் திகதியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறியமைக்காக 10 வேட்பாளர்கள் உட்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை, பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய, 08 வேட்பாளர்கள் உட்பட 43 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Comments