மதுபோதையில் வாகனம் செலுத்திய வேட்பாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் தண்டம்

🕔 January 13, 2018

துபோதையில் வாகனம் செலுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட வேட்பாளர் ஒருவருக்கு, தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தது.

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு சின்னம்) கட்சி சார்பாக, நொச்சியாகம பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் மேற்படி வேட்பாளரின் சாரதி அனுமதிப் பத்திரத்தினையும், இதன்போது 03 மாதங்களுக்கு நீதவான் தடை செய்தார்.

குறித்த வேட்பாளர் மதுபோதையில் செலுத்திச் சென்ற வாகனத்தில், சட்ட விரோதமாக சுவரொட்டிகளையும் எடுத்துச் சென்றார் எனக் கூறப்படுகிறது.

Comments