அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல்

🕔 January 12, 2018

ட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்­சுக்­க­ளையும் சட்­டமா அதிபர் திணைக்களத்தையும், ஜனாதிபதி தன்­வசப்படுத்திக் கொள்ளக் கூடும் என்று, கபே அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார்.

மோசடிக் காரர்­களை கைதுசெய்­வ­தாக மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறைவேற்றுவதற்காகவே, ஜனாதிபதி இவ்வாறு செய்யக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ரா­ஜ­கி­ரி­ய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

தனது பத­விக்­காலம் நிறை­வ­டையும் காலம் எப்­போது என்­பது ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சே­ன­விற்கு நன்கு தெரியும்.

இந்­நி­லையில் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 08ஆம் திகதி தொடக்கம், 2018 ஆம் ஆண்டு ஜன­வரி 11ஆம் திகதி வரையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று சுமார் 1098 நாட்கள் நிறை­வ­டைந்து விட்­டன.

அப்­ப­டி­யாயின் இன்னும் 696 நாட்கள் மாத்­தி­ரமே அவரின் பதவிக் காலம் உள்­ளன.

ஜன­வரி 15 ஆம் திக­தி­யாகும் போது ஜனா­தி­பதி சில விட­யங்­களை நாட்டு மக்­க­ளுக்கு கூறலாம். அதா­வது  தனது ஐந்து வரு­டங்­களில் மூன்று வரு­டங்கள் நிறை­வ­டைந்து விட்டன என்றும், இன்னும் இரு வரு­டங்­களில் தனது வாக்­கு­று­தி­களை நிறைவேற்றுவதாகவும் சொல்லலாம்.

இதற்­காக நீதி, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய அமைச்­சுக்­களை ஜனா­தி­பதி அதிரடியாக தன்­வசம் கைய­கப்­ப­டுத்தி கொள்­ளலாம்.

அத்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தையும் தன்கையில் எடுத்துக் கொள்ளலாம்.

தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு இவ்வாறு செய்வது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடினமான காரியமல்ல” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்