வாக்காளர் அட்டைகள், இன்று முதல் விநியோகம்

🕔 January 12, 2018

ள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு அட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை 08 மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் வாக்களிப்புக்கான அட்டைகளும், வீடுகளுக்கும் இந்த அட்டைகள் விநியோகிக்கப்படும்.

ஏனைய மாவட்டங்களுக்கான வாக்களிப்பு அட்டைகளை நாளை சனிக்கிழமை விநியோகிக்கவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

வாக்காளர் அட்டைகளை நேற்றைய தினம் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அந்த திட்டம் இரண்டு நாட்களால் பிற்போடப்பட்டது.

வீடுகளுக்கு வழங்கவுள்ள வாக்களிப்பு அட்டைகள் அரசாங்க அச்சகத்தில் இருந்து தாமதமாக கிடைக்கப் பெற்றதன் காரணமாகவும், தபால் ஊழியர்களின் தொழிற் சங்கத்தின் அறிவிப்பு காரணமாகவும் இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.

Comments