அங்கஜனின் பெருங்குணம்; சாதித்த மாணவனுக்கு, வீடு தேடிச் சென்று உதவி

🕔 January 11, 2018
– பாறுக் ஷிஹான் –

ல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் இம்முறை பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற  யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாகரனை  யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் வீடு தேடிச் சென்று பாராட்டினார்.

குறித்த மாணவனின் வீட்டுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், மாணவன் மற்றும் பெற்றோரை சந்தித்து தனது பாராட்டைத் தெரிவித்ததோடு, தனது பரிசாக உதவித்தொகையொன்றினையும் வழங்கினார்.

மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், இவ்வாறு மக்களைத் தேடிச் சென்று சேவை புரிவதும், நற்பணிகள் செய்வதும் வரவேற்புக்குரிய விடயமாகும்.

தொலைபேசி வாயிலாகவே சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியாமல், வாக்களித்த மக்கள் தத்தளிக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் செயற்பாடு பாராட்டுக்குரியதாகும்.

Comments