டிமிக்கி கொடுத்தவரை தேடும் பொலிஸார்; தகவல் வழங்கினால் சன்மானம்

🕔 January 11, 2018
– பாறுக் ஷிஹான் –

விளக்க மறியல் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதி மன்றிலிருந்து தப்பியோடிய நபர் ஒருவரை கைது செய்வதற்கு, யாழ்ப்பாண பொலிஸார் பொதுமக்களின் உதவியினைக் கோரியுள்ளனர்.

குறித்த நபரை கைது செய்வதற்கு உதவும் பொதுமக்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

திருட்டு, கொள்ளை மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றசாட்டின் பேரில், விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த அன்ரன் ஜெபராசா தயானந்தன் என்பவரே தப்பி ஓடியுள்ளார்.

மேற்படி நபரை, யாழ்ப்பாணம் சிறைச்சாலை அலுவலர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆஜர் செய்த பின்னர், விளக்கமறியலில் வைப்பதற்கு முற்பட்ட போதே, அவர் நீதிமன்றில் இருந்து தப்பி சென்றிருந்தார்.

இந்த நிலையில், இவரைக் கைது செய்யும் பொருட்டு தகவல்களை வழங்குவோருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என யாழ்ப்பாணம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த படத்திலுள்ள நபர்தான் தேடப்படுகிறார். தப்பி சென்று தற்போது மறைவாக வாழும் இந்த நபர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவருடைய பெயர் அன்ரன் ஜெபராசா தயானந்தன். புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தைச சேர்ந்தவர். இவர் தற்போது எங்கிருக்கிறார் எனும் தகவல் தெரிந்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவே தகவல் வழங்க முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்