சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை கலைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பு; பின்னணியில் ஹக்கீம்: அம்பலப்படுத்துகிறார் பசீர்

🕔 January 7, 2018

– மப்றூக் –

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தை கலைத்து விடுமாறு, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார்.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கிணங்க, அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த முடிவுக்கு வந்ததாவும் பசீர் சேகுதாவூத் கூறினார்.

முஸ்லிம் காங்கிரசின் இரட்டைத் தலைவர்களில் ஒருவராக இருந்த ரஊப் ஹக்கீமை, 2000ஆம் ஆண்டு – தனிப் பெரும் தலைவராக பிரகடனம் செய்வதற்கு துணிந்து நின்று போராடிய சாய்ந்தமருது மண்ணுக்கு, ரஊப் ஹக்கீம் செய்துள்ள  இந்தச் செயல், மிகப்பெரும் அநியாயமாகும் எனவும் பசீர் சுட்டிக்காட்டினார்.

எனவே, பள்ளிவாசலொன்றுக்கு எதிராக ரஊப் ஹக்கீம் மேற்கொண்டுள்ள இந்த அரசியல் பழிவாங்கலை கண்டித்து, கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனமும், உலமாக்களும் கிளர்ந்தெழ வேண்டுமென்றும், அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில், பசீர் சேகுதாவூத் தெரிவித்த முழு விபரங்களையும் வீடியோவில் காணலாம்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்