தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார்

🕔 August 16, 2015

Ilangakoon - IGPபொதுத் தேர்தல் நடவடிக்கைகளின் போது, அனைத்துத் தரங்களையும் உள்ளடக்கியதாக, சுமார் 63 ஆயிரம் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகிய இடங்களிலும், ரோந்து நடவடிக்கை மற்றும் கடகம் அடக்குதல் போன்ற பணிகளிலும் மேற்படி பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

மேற்படி நடவடிக்கைகளுக்காக – விசேட அதிரடிப் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, பொலிஸார் சட்டத்தினை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்தியதன் காரணமாக, தேர்தல் வன்முறைகளை குறைக்க முடிந்ததாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

தேர்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு – வேட்பாளர்கள், ஆதரவாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பொலிஸாருக்கு ஒத்துழைப்பினை வழங்குமாறும் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்