வங்குரோத்தை மறைக்க, கட்டுக் கதைகளை மு.கா. பரப்பி வருகிறது: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு

🕔 January 4, 2018

 

கில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக் முடியாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் காங்கிரசோடு தொடர்பில்லாத கிண்ணியாவைச் சேர்ந்த இரண்டு நபர்களை முஸ்லிம் காங்கிரசில் இணைத்துவிட்டு, அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டு ஆதாயம் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

முஸ்லிம் காங்கிரசுக்கு சரிநிகராக வளர்ந்து வரும் மக்கள் காங்கிரஸ் இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளதால், தேர்தல் தொடர்பான பீதியில் இவ்வாறான நாடகங்களை முஸ்லிம் காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை குழப்பி வருகின்து எனவும் இது தொடர்பில் எவரும் அலட்டிக்கொள்ள வேண்டாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை மாவட்டத்திலும்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வெற்றி உறுதிசெய்யப்பட்டதை அறிந்துகொண்ட முஸ்லிம் காங்கிரசினர், மக்களை குழப்பும் வேலையை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்;  திருமலை மாவட்டத்துக்கு மக்கள் காங்கிரஸ் பல்வேறு அபிவிருத்திகளை  செய்துள்ளது. எதிர் காலத்திலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்யவுள்ளது என்றார்.

Comments