பசீர் சேகுதாவூத் எழுதிய கடிதமும், ஹக்கீம் பட்ட அவஸ்தையும்: அன்சில் உடைத்த ரகசியம்

🕔 January 3, 2018

– அஹமட் –

மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர்  பசீர் சேகுதாவூத் எழுதிய கடிதமொன்றினைப் பெற்றுக் கொண்ட மு.கா. தலைவர் ஹக்கீம்; அந்தக் கடிதத்தைப் படிக்காமலேயே பயத்தினால் பட்ட அவஸ்தை குறித்து, மு.காங்கிரசின் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் அண்மையில் விபரித்திருந்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான உள்ளுராட்சித் தேர்தலில் பாலமுனை வட்டாரத்தில் மயில் சின்னம் சார்பாக போட்டியிடும் அன்சில்; பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, மேற்கண்ட வியத்தை விபரித்தார்.

மு.கா. தலைவர் ஹக்கீமுடைய ஏராளமான குற்றங்கள் குறித்து, கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அறிந்து வைத்துள்ளார் என்றும், அதனால் – கட்சியிலிருந்து பசீர் விலகிய பின்னர், அவரிடமிருந்து வரும் கடிதத்தைக் கண்டால் கூட, ஹக்கீம் பயத்தால் நடுங்குவதாகவும் அன்சில் கூறினார்.

பசீர் சேகுதாவூத்திடமிருந்து ஹக்கீமுக்கு வந்த கடிதமொன்று குறித்தும், அதனால் ஹக்கீம் பட்ட அவஸ்தை குறித்தும் – அன்சில் தெரிவித்த விடயங்களின் முழு விபரங்களையும், வீடியோவில் காணலாம்.

வீடியோ

Comments