தந்தை அமைச்சராகி ஒரு நாள் கழிவதற்குள், அதிரடிப்படைப் பாதுகாப்பு கேட்கிறார் மகன்

🕔 December 31, 2017

ட்டம், ஒழுங்கு ராஜாங்க அமைச்சர் பியசேன கமகேயின் புதல்வர் ரன்திம கமகே, தனக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது தந்தையான பியசேன கமகே, ராஜாங்க அமைச்சர் பதவியினைப் பெற்று 24 மணித்தியாலங்கள் கழிவதற்குள், இந்தக் கோரிக்கையினை ரன்திம கமகே விடுத்திருந்தார்.

ரன்திம கமகே, தென் மாகாண உறுப்பினராகப் பதவி வகிக்கின்றார்.

ஆயினும், எந்தவொரு மாகாண சபை உறுப்பினருக்கும் விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என, பொலிஸ் தரப்பிலிருந்து தெரிய வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பியசேன கமகே தோல்வியடைந்தார். ஆயினும், இரட்டைக் குடியுரிமையினைக் கொண்டிருந்தமையினால், கீதா குமாரதுங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தமையினை அடுத்து, அந்த இடத்துக்கு பியசேன கமகே நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, இவருக்கு கடந்த வியாழக்கிழமையன்று ராஜாங்க அமைச்சுப் பதவியினை ஜனாதிபதி வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்