கட்சியொன்றின் வேட்பாளர், மற்றைய கட்சித் தலைவர்களின் படங்களை பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணையாளர்

🕔 December 29, 2017

ள்ளுராட்சித் தேர்தல் பிரசாரங்களின் போது, குறித்த ஒரு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள்கள், வேறு கட்சிகளின் தலைவர்களுடைய படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின் பிரகாரம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படங்களைப், தமது கட்சியின் வேட்பாளர்கள் பயன்படுத்த முடியும் என்று, சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.

மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய அண்மையில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசும்போது; ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படங்களை பிரசாரத்துக்காகப் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்திருந்தார். மஹிந்த ராஜபக்ஷ, இன்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினராக உள்ளமையினாலேயே, அவ்வாறு செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷவின் படங்களை ஏனைய கட்சியின் வேட்பாளர்கள் பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு, தாமரை மொட்டினை சின்னமாகக் கொண்ட, பொதுஜன பெரமுன கட்சியினர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்