ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி

🕔 December 28, 2017

ப்பானிஸ்தானின் தலைநகரம் காபூலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 84 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இறந்தவர்களில் இரு சிறுவர்களும் அடங்குவதாக ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக உரிமை கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பின் 38 வருடத்தை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த கட்டடத்தின் கீழ் பகுதியில் மேலும் இரண்டு குண்டுகள் வெடித்ததாகவும், ஆயினும் இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments