இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாய் பெறவில்லை என்று, ஹக்கீம் அழிவுச் சத்தியம் செய்ய வேண்டும்: முன்னாள் தவிசாளர் அன்சில் அழைக்கிறார்

🕔 December 28, 2017

– முன்ஸிப் அஹமட் –

மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவளிப்பதற்காக, இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாவினை ரஊப் ஹக்கீம் பெற்றுக் கொள்ளவில்லை என்று, ரஊப் ஹக்கீமால் அழிவுச் சத்தியம் செய்ய முடியுமா என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பாலமுனை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கேள்வியெழுப்பியுள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான மயில் சின்னத்துக்கு ஆதரவு வேண்டி நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்தக் கேள்வினை எழுப்பினார்.

குமாரி கூரேயுடன் பாாலியல் தொடர்பு தனக்கு இருக்கவில்லை என்றும், குமாரியின் மகளை பாலியல் ரீதியாக பிரச்சினைப்படுத்தவில்லை என்றும், நோய்வேயிடம் காசு வாங்கவில்லை என்றும், ஹக்கீமை அழிவுச் சத்தியம் செய்யுமாறு கூறுங்கள் என்று, உலமாக்களிடமும் அன்சில் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“ரஊப் ஹக்கீமை கூட்டி வாருங்கள். குமாரி கூரேயுடன் தொடர்பு அவருக்கு பாலியல் தொடர்பு இருந்ததில்லை என்று சத்தியம் செய்யச் சொல்லுங்கள். குமாரியின் மகளுடனும் பாலியல் ரீதியாக ஹக்கீம் பிரச்சினை படவில்லை என்றும், அது தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக எந்தவித முறைப்பாடும் இல்லை என்றும், அந்த சம்பவத்தினால் மஹிந்த ராஜபக்ஷவின் காலில் ரஊப் ஹக்கீம் விழவில்லை என்றும், ஹக்கீமை சத்தியம் செய்யச் சொல்லுங்கள்.

குமாரியின் மகளுடன் ஹக்கீம் பிரச்சினைப்பட்டமை தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டு பிரதியை முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், பகிரங்கப்படுத்தி இருக்கின்றாரே, அதுவெல்லாம் பொய் என்று ஹக்கீமை சத்தியம் செய்யச் சொல்லுங்கள்.

நோர்வேயிடம் காசு வாங்கவில்லை என்று சத்தியம் செய்யச் சொல்லுங்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவிடம் காசு வாங்கவில்லை என்று சத்தியம் செய்யச்  செய்யச் சொல்லுங்கள், அதன் பின்னர் இந்தியாவிடம் 20 கோடி பணம் வாங்கிக் கொண்டுதான் மைத்திரிபக்கமாக வந்தார் எனும் குற்றச்சாட்டினை முடிந்தால், இல்லை என்று சத்தியம் செய்யச் சொல்லுங்கள்.

ஆனால், நான் இவ்வாறான அபாண்டங்கள் எதிலும் ஈடுபட்டதில்லை. சிறிய தவறுகள் என்னிடம் இருக்கலாம். ஆனால், பெரிய தவறுகள் எதையும் நான் செய்ததில்லை. என்னுடைய பெயரிலோ என்னுடைய குடும்பத்திலுள்ளவர்களின் பெயரிலோ எனக்கு எந்தச் சொத்துக்களும் கிடையாது.

எனவே, அழிவுச் சத்தியம் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன், ரஊப் ஹக்கீமும் அவ்வாறு சத்தியம் செய்வதற்கு வரவேண்டும்.

ரஊப் ஹக்கீம் செய்த தவறுகளால் முஸ்லிம் சமூகம் அடகு வைக்கப்படவில்லை என்று, ஹக்கீம் சத்தியம் செய்து சொல்ல வேண்டும்.

ஹக்கீமுடைய இவ்வாறான தவறுகளை மௌலவிமார்களிடம் அழுது சொல்லியிருக்கிறேன். அதனைக் கேட்டவர்கள் உலமாக்கள் சபையைக் கூட்டுவோம் என்றார்கள், கதைப்போம் என்றார்கள், ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையினருக்கு ஒரு சவாலாகச் சொல்கிறேன்; ரஊப் ஹக்கீமை கூட்டி வாருங்கள், நானும் வருகிறேன், பசீர் சேகுதாவூத்தும் வரட்டும், ஹசனலியும் வரட்டும்,  ஹக்கீமை  அழிவுச் சத்தியம் செய்யச் சொல்லுங்கள்.

ஹக்கீம் 20 கோடி ரூபாவை இந்தியாவிடமிருந்து பெற்றதாக ஹசனலிதான் சொன்னார். ஆனால், ஹசனலியின் சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாதாம் என்கிறார்கள். குமாரியின் மகளிடம் பாலியல் ரீதியாக ஹக்கீம் மோசமாய் நடந்து கொண்டார் என்றும், அதனால் அவருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு உள்ளதாகவும், அது நிரூபணமானால், ஹக்கீமால் ஒரு ‘பியோன்’ வேலை கூட பெற்றுக் கொள்ள முடியாது என்றும், பசீர்தான் கூறினார். ஆனால், பசீர் சேகுதாவூத்தின் சாட்சியம் எடுபடாது என்கிறார்கள். அப்படியென்றால், ரஊப் ஹக்கீம் மட்டும் எப்படி உத்தமராக முடியும்.

புதிய அரசியலமைப்பு அமுலாக்கப்பட்டு விட்டால், முஸ்லிம் சமூகம் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்படும். இந்தத் தேர்தலில் ஹக்கீக்கு நீங்கள் வாக்களித்தால், நாளை நாம் எல்லோரும் கைசேதப்பட்டு விடுவோம்” என்றார்.

வீடியோ

Comments