தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்

🕔 December 19, 2017

மிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வன்னி மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மு.காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

மு.காங்கிரசின் செயலாளர் நிஸாம் காரியப்பர் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இது தொடர்பில் பேசுவதற்கு, மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர், ஹெலிகொப்டர் மூலம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலிருந்து மன்னார் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதுவித பேச்சுவார்த்தைகளையும் நடத்தாமல் நிஸாம் காரியப்பரை திருப்பியனுப்பினர்.

ஆயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையினை, தாம் இன்னும் இழக்கவில்லை என்றும் நிஸாம் காரியப்பர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Comments