உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோரில், 03 லட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லை

🕔 December 17, 2017

நாட்டில் தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 05 லட்சம் பேர் உள்ளனர் என்று, சிரேஷ்ட உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் கணக்கெடுப்பு எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஒப்புக் கொண்ட அவர், தற்போதுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களின் எண்ணிக்கை 05 லட்சமாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் டாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் சுமார் 03 லட்சம் பேர், தேசிய அடையாள அட்டை இன்றியே தம்மைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்