சு.கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை கொண்டுவர முயற்சி; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன களத்தில்

🕔 December 15, 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வரும் முயற்சியில், ஜனாதிபதியின் சகோதரரும் தொழிலதிபருமான டட்லி சிறிசேன ஈடுபட்டு வருவதாக, ராவய பத்திரிகை செய்தியொன்றினை வெளியிட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியினையும் ஒன்றிணைந்த எதிரணியையும் ஐக்கியப்படுத்தி, அதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை நியமிப்பதே, டட்லியின் திட்டமெனக் கூறப்படுகிறது.

உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர் உத்திதேசித்துள்ளார்.

இதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உத்தியோகபூர்வமற்ற தலைவர்களுடனும், பசில் ராஜபக்ஷவுடனும் டட்லி சிறிசேன பல தடவை தொலைபேசி ஊடாக பேசியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவைக் கொண்டு வரும் இந்தத் திட்டத்துக்கு பசில் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்