அழகியல் கற்கைகள் நிறுவக மாணவி, சிந்துஜாவின் ஓவியக் கண்காட்சி

🕔 December 15, 2017

– ரூபன் காந்த் –

ட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் – கிழக்குப் பல்கலைக்கழக கற்புல தொழிநுட்பத்துறை இறுதி ஆண்டில் கல்வி கற்கும் சிந்துஜா தவரத்தினத்தின் கைவண்ணத்தில் உருவான யுத்த சூழ்நிலையில் சிறார்கள் அனுபவித்த துன்பகரமான வடுக்களை வெளிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி  இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் – கிழக்குப் பல்கலைக்கழக கற்புல தொழிநுட்பத்துறையில், இறுதி ஆண்டில் கல்விகற்கும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்வுகள் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.

அதன் ஒரு அங்கமாகவே, சிந்துஜா தவரத்தினத்தின் கைவண்ணத்தில் உருவான  INFINITY PAINTING ஓவியக் கண்காட்சி, இன்ற இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி ஜெயசங்கர். விரிவுரையாளர்கள் புஸ்பகாந்தன், மோகனதாஸ், செந்தூரன், பிரியதர்சினி, பீ.ரூபநீதன் திவ்யரூபசர்மா, அசல்யா, மற்றும் கல்லூரியின் மாணவர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.

குறித்த கண்காட்சி எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களிலும் நடைபெறும்.

Comments