உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் கட்டுப்பணம் செலுத்தின

🕔 December 8, 2017

– யூ.கே. காலித்தீன் –

ல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றில் சுயேட்சையாக போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் பணிமனை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கட்டுப் பணம் செலுத்தப்பட்டன.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் கல்முனை மாநகரசபைக்கும்,
சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், மாளிகைக்காடு சைத் இப்னு தாபித் பள்ளிவாசல் தலைவருமான எம்.ஐ. ஸாஹிர் ஹுஸைன் தலைமையில் காரைதீவு பிரதேச சபைக்கும் கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டன.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு செலுத்தப்பட்ட முதலாவது கட்டுப்பணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினைப் பெற்றுத் தருவதில் அரசியல் கட்சிகள் தமக்கு துரோகமிழைத்ததாக சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகம் தெரிவித்திருந்த நிலையில், எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்காமல், தாங்களே சுயேட்சைக் குழுக்களை தேர்தலில் நிறுத்துவது எனவும் பள்ளிவாசல் நிருவாகம் தீர்மானித்திருந்தது.

இதற்கமைவாகவே, மேற்படி கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்