கடும் காற்று வீசும், கடல் கொந்தளிக்கும்; இன்றும் நாளையும் எச்சரிக்கையாக இருக்கவும்

🕔 December 6, 2017

ங்­காள விரி­கு­டாவில் ஏற்­படும் தாழ­முக்­கத்­தினால் உரு­வாகும் கடுங்­காற்று இலங்கையின்  கரையோர பிர­தே­சங்­களில் இன்று புதன்கிழமையும், நாளையும் வீசும்  என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆழ்­க­டலில் மீன் பிடிக்க செல் வோர், சுழி­யோ­டிகள் மற்றும் கடல் பயணங்களை மேற்­கொள்வோர் எவரும் எதிர்­வரும் எட்டாம் திகதி வரையில் கட­லுக்கு செல்ல வேண்டாம்  என அனர்த்த முகா­மைத்­துவ நிலைய பணிப்பாளர் நாயகம் பிரேமலால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்­கையை சுற்றி வீசும் கடுங்காற்­றினால் எதிர்­வரும் நாட்களில் ஏற்­படப் போகும் அசாதாரண நிலை­மைகளை எதிர்­கொள்ள. அவ­ச­ர­கால அவ­தான நட­வ­டிக்­கைகள் குறித்து தெளி­வுப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பு நேற்று செவ்வாய்கிழமை அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்­றது.

இதில் கலந்துகொண்டு பேசியபோதே, அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது தொடர்பாக, அவர் மேலும் தெரிவிக்கையில்;

“வட அந்­த­மானில் ஏற்­பட்­டுள்ள குறைந்த வலு­வான தாழ­முக்­கத்­தினால் ஏற்­பட்ட கடும் காற்று, காங்­கேசன் துறை, திரு­கோ­ண­மலை, பொத்­துவில், காலி, ஹம்பாந்தோட்­டை  பகுதிகளில் இன்று வீசக் கூடும். எனவே அந்த பிர­தே­சங்­களை சேர்ந்த கரை­யோர வாழ் மக்கள் மிகவும் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ படுகின்­றார்கள்.

இலங்கை கடற்­ப­ரப்பில் காற்றின் வேகம் இன்று  100க்கு 50 வீதம் அதி­க­மாக இருப்பதோடு, வட­கி­ழக்கில் நாளை இதன் வேகம் இன்னும் அதி­க­ள­வாக காணப்­படும்.

இந்த காற்றின் வேகம் எட்டாம் திக­தி­ய­ள­வி­லேயே குறை­வ­டையக் கூடும் என எதிர்பார்க்­கப்­ப­டு­கின்­றது. மேலும் இந்த காற்றின் வேகம் 70 கிலோ மீற்­ற­ருக்கு அதிகமாக இலங்­கையை கடந்து செல்லும். இவ்­வே­ளையில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்­படும்.

இதனால் கடற்­க­ரை­ய­ருகில் உள்ள மீன­வர்­கள் – தொழில் உப­க­ர­ணங்­களை பாதுகாத்துக் கொள்­வ­தோடு கட­லுக்குள் பய­ணிப்­பதை முற்­றாக தவிர்த்துக் கொள்­ள வும் அறி­வு­றுத்­தப் ­ப­டு­கின்­றார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்