அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், ஆளுமைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு

🕔 December 6, 2017

– சப்னி அஹமட் –

ட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், சாதனையாளர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு ‘அறபாவின் ஆளுமைகள்’ எனும் மகுடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இதன்போது, அறபா வித்தியாலயத்தில் கல்வி கற்று தற்போது உயர் பதவிகளில் உள்ளவர்களும், அறபா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களும் என தேர்வு செய்யப்பட்ட சிலர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதற்கிணங்க, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, அம்பாறை மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல். தெளபீக், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், ஆசுகவி அன்புடீன் மற்றும் இஸ்மாயில் மனேஜர் ஆகியோருக்கு நிகழ்வில் கௌரவம் வழங்கப்பட்டது.

இதேவேளை, பாடசாலையில் 2017ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், தவணைப் பரீட்சைகளில் சிறப்பாக சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பாடசாலையின் சிறந்த மாணவர்கள் பாராட்டி பரிசளிக்கப்பட்டனர்.

மேலும் பாடசாலையின் ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டார்கள்.

நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் ஏ.எல்.எம். நசீர் மற்றும் உதுமாலெப்பை ஆகியோர் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் அன்பளிப்புகளை வழங்கி வைத்தனர்

அறபாவின் ஆளுமைகள் கௌரவிப்பு நிகழ்வு, ஒவ்வொரு வருடமும் அதிபர் அன்சார் தலைமையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்