அம்பகமுவ பிரதேச எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

🕔 December 4, 2017

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ உள்ளுராட்சி சபை எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

அம்பகமுவ உள்ளுராட்சி சபைக்கான எல்லை நிர்ணயத்தின் போது, அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தெரிவித்துள்ளார்.

குறித்த மனுவில் உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அந்த அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ பிரதேசமானது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயத்தின் போது, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பெயரிடப்பட்டது. இந் நிலையில். அப் பகுதி மக்களுக்கும், அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் பாரியளவில் அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந் நடவடிக்கையானது அடிப்படை உரிமையினை மீறுவதாகத் தெரிவிப்பதோடு, இது தொடர்பில் வெளிவிடப்பட்ட எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை இடைநிறுத்த உத்தரவிடுமாறும், மனுதாரர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்