உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல்

🕔 December 3, 2017

திர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு, 350 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவத்துள்ளார்.

இலங்கையில் முதன் முதலாக நடைபெறவுள்ள கலப்பு முறையிலான உள்ளுராட்சித் தேர்தல் இதுவாகும்.

இருந்தபோதும், 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான செலவாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 550 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்படி நிதியில் அரைவாசிக்கும் அதிகமான தொகை, உள்ளுராட்சித் தேர்தலுக்குச் செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடைபெறவுள்ள தேர்தலில் 60 வீதமானோர் வட்டார முறையிலும், 40 வீதமானோர் விகிதாரசார அடிப்படையிலும் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்