வரதராஜப் பெருமாள்; கூட்டமைப்புடன் இணைந்தாலும், அரசியல் செய்ய முடியாது: கிளம்புகிறது சர்ச்சை

🕔 November 28, 2017

லைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கும் வரதராஜப் பெருமாளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தனுக்கும் இடையில் இது தொடர்பாக அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

இந்த தகவலை ஊடகங்களுக்கு வரதராஜப் பெருமாள் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், வரதராஜப் பெருமாள் – இலங்கையில் அரசியல் செய்ய முடியாது என்று, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வரதராஜப் பெருமாள் இலங்கையில் பிறந்தவர் என்றாலும், அவர் தற்போது இந்தியாவின் பிரஜாவுரிமையினைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்திய ஒரிஸா மாநிலத்தில், இந்திய பிரஜையாக வசித்து வரும் வரதராஜப் பெருமாள், இலங்கைக்கு சுற்றுலா வீசாவிலேயே வந்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

அந்த வகையில், வெளிநாட்டு பிரஜையொருவர் இலங்கையில் அரசியல் செய்ய முடியாது என்பதற்கிணங்க, வரதராஜப் பெருமாள் – தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டாலும், அவர் இலங்கையில் நேரடி அரசியலில் ஈடுபட முடியாது என்றும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்