பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

🕔 November 26, 2017

கிந்தோட்டை விடயத்தில் நீதியை நிலை நாட்ட, தான் தவறியுள்ளதாக கூறி மன்னிப்பு கோரியுள்ள பொலிஸ் மா அதிபர்; மன்னிப்பு கேட்பதை விட ராஜினாமா செய்வதே பொருத்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்ச்க்ஷ தெரிவித்தார்.

பொன்னறுவையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;

“நீதியை தாமதித்து நிலை நாட்டினாலும், அதனால் யாருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத சில விடயங்கள் உள்ளன. அவ்வாறாவற்றை ஒருவர் குறிப்பிட்டு, ‘என்னால் உடனடியாக அந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட முடியாது போய்விட்டது. மன்னித்து விடுங்கள் ‘ என்று கூறினால், அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், உரிய நேரத்தில் நீதியை நிலைநாட்ட தவறினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் விடயங்கள் உள்ளன. அந்த இழப்புக்களை பின்னர் ஈடுசெய்ய முடியாது. அப்படியானவற்றில், என்னால் நீதியை உடனடியக நிலைநாட்ட முடியாது போய்விட்டது – மன்னித்து விடுங்கள் என்று யாரும் கூறினார். அதனை மன்னிக்க முடியாது.

கிந்தோட்டை போன்ற கலவர சந்தர்ப்பங்களின் போது உடனடியாக நீதியை நிலைநாட்ட வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறு பொடுபோக்கு நிகழ்ந்தாலும் – அது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இது இலங்கை பொலிஸ் மா அதிபருக்கும் தெரியாததல்ல. அவ்வாறான சந்தர்ப்பத்தில் பொலிஸ் மா அதிபர்,  நீதியை நிலைநாட்ட தவறிவிட்டதாகக் கூறி மன்னிப்பு கோருவது பொருத்தமானதல்ல. பொலிஸாசாரின் பொடுபோக்கினாலேயே கிந்தோட்டை கலவர பூமியாக மாறியதென நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கரணம் தப்பினால் மரணம் என்ற சந்தர்ப்பத்தில் இப்படி சிறு பிள்ளைகள் போன்று காரணம் சொல்லாமா என சிந்தித்து பாருங்கள். இவர் இது போன்று பல தடவை பொலிஸார் மன்னிப்பு கோரியுள்ளார். பொலிஸ் மா அதிபர் என்பவர் நெஞ்சை நிமிர்த்தி செல்ல வேண்டிய ஒருவர். அவர் எதற்கு எடுத்தாலும் மன்னிப்பு கோருவது அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானதல்ல. அவர் தனது பதவிக்கு மரியாதை வழங்குபவராக இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுவே இப் பதவியில் எதிர்காலத்தில் உட்கார இருப்பவர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.

பாடசாலை பிள்ளைகளைப் போல தவறு செய்வதும், பின்னர் அதற்கு மன்னிப்பு கோருவதுமே பொலிஸ் மா அதிபருக்கு வாடிக்கையாகி விட்டது” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

புதிது பேஸ்புக் பக்கம்