சும்மாவான ஜும்ஆ; மூத்த எழுத்தாளர் ஹனீபாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்

🕔 November 24, 2017

– முன்ஸிப் –

ள்ளிவாசலுக்குச் செல்லும் போது அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் ஒரு கட்டுப்பாடும் நெறிமுறையும் உள்ளது.

மார்க்கத்துக்கு முரணற்ற வகையிலும், வெள்ளை அல்லது அது சார்ந்த நிறத்திலுமான ஆடைகளை அணிந்து செல்லுமாறு இஸ்லாம் உபதேசிக்கின்றது.

ஆனால், சிலர் இது குறித்து கவனத்தில் எடுப்பதில்லை. இடம், பொருள், ஏவலின்றி ஆடைகளை அணிந்து கொண்டு சிலர் பள்ளிவாசலுக்கு வருகின்றமையினால் ஏற்படும் தர்மசங்கடங்கள் விபரீதமானவையாகும்.

இவ்வாறான ஒழுக்கம் பற்றிய விவஸ்தை அறியாத இளைஞர் ஒருவர் அணிந்து வந்த ஆடையினால், நமது மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காகச் சென்றிருந்தபோது எதிர்கொண்ட மன உளைச்சலை, தனது பேஸ்புக் பக்கத்தில் அவருக்கேயுரிய நையாண்டியுடன் விபரித்து எழுதியுள்ளார்.

அவருடைய அந்தப் பதிவினையும், அவர் இட்டுள்ள புகைப்படத்தினையும் உங்களுக்காக வழங்குகின்றோம்.

##

சும்மாவான எனது ஜும்ஆ

றபியுல்அவ்வல் மாதத்தின் முதலாவது ஜும்ஆ. வழமைபோல நேரகாலத்தோடு பள்ளிக்கு வந்துவிட்டேன்.

இந்த மாதத்தில் அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடையாக வருகை தந்த நபிகளாரின் பிறப்பு இறப்பு தொடர்பான வரலாற்றின் பக்கங்களை ஹஷரத் அவர்கள் சிறப்பாக தெளிவு படுத்திக் கொண்டிருந்தவேளையில்….

திடீரென ஓர் இளைஞர் எனக்கு முன்னால் அமர்ந்தார்.

அவர் அணிந்திருந்த ரீஷேட்டில் பொறிக்கப்பட்டிருந்த இந்த உலகின் 38 உல்லாசபுரி நாடுகளின் பெயர்களை ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி வாசித்து முடிவுக்கு வந்தபோது …

தொழுகைக்கான இகாமத் ஒலித்திற்று.

யாஅல்லாஹ்! சும்மாவாகிப்போன எனது ஜும்ஆவை ஏற்று அருள்புரிவதுடன் இனிமேல் இப்படியான குதறத்களை எனது கண்களைவிட்டும் தூரப்படுத்துவதுடன் – இந்த இளைஞரின் மோட்டார்சைக்கிளின் கோபப்பார்வையிலிருந்தும் பாதுகாத்தருள்வாயாக.

குறிப்பு: நம் ஒவ்வொருவருக்கும் இது படிப்பினையாக அமையட்டும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்