இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் நிலநடுக்கம்; டிசம்பர் 31 க்கு முன்னர் ஏற்படும்: இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அறிக்கை

🕔 November 21, 2017

லங்கை உட்பட இந்து சமுத்திரத்திர பிராந்தியத்தில் அமைந்துள்ள 11 நாடுகள், டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்பாக பாரிய நில அதிர்வொன்றினை எதிர்நோக்கவுள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

இந்தியாவின் புவியியல் ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையினை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அந் நிறுவனம் கையளித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், தாய்லாந்து மற்றும் மத்தியகிழக்கு நாடுகள், மேற்படி நிலநடுக்கத்தினால் பிரதானமாகப் பாதிக்கப்படும் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறுகிய காலப் பகுதியில் நில அதிர்வொன்றினை எதிர்வு கூற முடியாது என்று, இலங்கையின் சிரேஷ்ட பேராசிரியர் சி.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளதோடு, இந்திய ஆய்வு நிறுவனத்தின் மேற்படி அறிக்கையினையும் நிராகரித்துள்ளார்.

இதேவேளை, கண்டியிலுள்ள அடிப்படைக் கற்கைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் இது தொடர்பில் கூறுகையில்; இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே நிலநடுக்கத்தினை கணிப்பிட்டு எதிர்வு கூற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மேற்சொல்லப்பட்ட நாடுகள் வெவ்வேறு நிலக்கீழ் பாறைகளில் அமைந்துள்ளமையினால், அவை ஒரே நேரத்தில் நில நடுக்கத்தை எதிர்வு கொள்வதற்கான சாத்தியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்