எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல், தரை மட்டம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அட்டகாசம்

🕔 August 10, 2015

Hentry - 01ல்முனை மாநகர சபையினால், கல்முனை நகர்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான நினைவுக் கல்லினை, பொதுத் தேர்தலில் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் ஒன்றிணைந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை உடைத்து, தரைமட்டமாக்கியுள்ளனர்.

கல்முனை மாநகரசபையினர், குறித்த வீதிக்கு – அனுமதியில்லாமல் பெயர் சூட்டியதாகத் தெரிவித்தே, அவ்வீதிக்கென அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லினை, சம்பந்தப்பட்டவர்கள் உடைத்துள்ளனர்.

நேற்றைய தினம், கல்முனை நகருக்கு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க வருகை தருவதற்கு சில மணி நேரங்கள் முன்பாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் வருகையினை முன்னிட்டு, கல்முனை நகர் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு, குறித்த வீதிக்கும் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, நினைவுக்கல்லும் அமைக்கப்பட்டிருந்தது.

வீதிக்கான பெயர் கல்லை உடைத்த பின்னர்,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து, கல்முனை மாநகர மேயர் நிஸாம் காரியப்பருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டிருந்தனர்.Hentry - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்