சுனாமி எனும் செய்தியில் உண்மையில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்

🕔 November 15, 2017

– அஹமட் –

ல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அவை சுனாமிக்கான அறிகுறிகள் எனவும் பரவும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை.

அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதிகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என, ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து வருகின்ற செய்திகள் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது.

இதேவேளை, இலங்கையில் சுனாமி ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் தற்போது இல்லை என்றும், சுனாமி குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டமையினைத் தொடர்ந்து, சுனாமி பற்றிய வதந்திகளும், அச்சமும் அம்பாறை கரையோரப் பிரதேசங்களில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அச்சம் காரணமாக, மக்கள் பதட்டமடைந்து திரிகின்றமையினை காண முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்