மஹிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரிக்கு விளக்க மறியல்

🕔 November 13, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட் மூவரையும் 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

கொழும்பிலுள்ள ஹையட் ரிஜென்சி ஹோட்டலுக்கு ஒதுக்கப்பட்ட அரச நிதியினை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

நீதிமன்றில் இவர்கள் இன்று சரணடைந்தமையி னை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்