கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பியசேனவை நியமிக்க தீர்மானம்: அமைச்சர் அமரவீர தெரிவிப்பு

🕔 November 7, 2017

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயுள்ளமையினை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேயை நியமிப்பதற்கு, ஐ.ம.சு.முன்னணி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமையினை கீதா குமாரசிங்க கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்க முடியாது எனத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது என, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனையடுத்து, அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றில் கீதா வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் மேன் முறையீட்டு நீதிமன்றின் தீப்பினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதனால், கீதா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இழந்தார்.

இலங்கை மற்றும் சுவிசர்லாந்து ஆகிய நாடுகளில் கீதா குமாரசிங்க குடியுரிமைகளை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்